ஞாநிக்கு வாழ்த்து

நேரடி அரசியலில் இறங்கியிருக்கும் ஞாநி சங்கரன் க்கு வாழ்த்துகள். எனக்கு ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வரவில்லை. ஆனால் ஞாநியை நிச்சயம் நம்புவேன். ஞாநி போன்றவர்கள் எம்பி ஆனால் குறைந்தபட்சம் தொகுதிக்கு நல்லது. என் தொகுதியில் ஞாநி நிற்பாரேயானால் கட்சியை மறந்துவிட்டு நிச்சயமாக ஞாநிக்கு வோட்டுப் போடுவேன்.

Continue reading →

மொசார்ட் – முன்னுரை

மொசார்ட்டை எனக்குப் பிடிக்கும். எத்தனை பிடிக்கும் என்றால் எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும் அளவுக்கு மொசார்ட்டையும் பிடிக்கும். பல சமயங்களில் ராஜாவுக்கும் மொசார்ட்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்று தோன்றும். இப்படிச் சொல்வதை சனாதனவாதிகள்  அபத்தம் எனலாம். அது குறித்து எனக்குக் கவலையோ அக்கறையோ கிடையாது. மொசார்ட்டை நான் இளையராஜா மூலமாகத்தான் அறிந்தேன். ராஜாவின் பல வேலைப்பாடுகளில் மொசார்ட்டின் தாக்கத்தைப் பார்த்திருக்கிறேன். இது மகனுக்கு இருக்கும் தந்தையின் ஜாடை போன்றது. ரொம்ப உள்ளே போக எனக்கு விருப்பமில்லை. நான் […]

Continue reading →

கலைஞர்கள் காலமாகும்போது தேசம் ஏழையாகிறது. இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி.

Continue reading →

விரைவில் எனது மொசார்ட் புத்தகம் FreeTamilEbooks.com மூலம் விலைமதிப்பற்ற மின் நூலாக வெளியிடப்படும்.

Continue reading →

பிரளயத் தாலாட்டு

காலை கண் விழித்து எழுந்ததும் அருந்தும் காப்பி சனியன் ருசியாக இருப்பதில்லை. அரை மணிநேரம் பல் துலக்கி முடித்தபின்பும் இடது மேல் பக்கம் உள் ஓரத்தில் இருக்கும் ஏதோ ஒரு பல்லுக்கு இடுக்கில் என்னவோ ஒரு தரித்திரம் பிடித்த வஸ்து வெளியேறாமல் அப்படியே தங்கிவிட்டிருக்கிறது. நாக்கால் நிமிண்டி நிமிண்டி உயிரே போகிறது. வெளியே கிளம்புகிற அவசரத்தில் குளிக்கும்போது நடுமுதுகைச் சரியாகத் தேய்க்க முடிவதில்லை. என்ன எழவு இது? தினமும் இதே இட்லிதானா? ஒரு பச்சை அல்லது கருநீல […]

Continue reading →

சிலபேர் NaMo என்கிறார்கள். சிலர் NoMo என்கிறார்கள். வேறு சிலரோவெனில் JeMo என்கிறார்கள். இதெல்லாமே ஷங்கர் ReMo என்றதன் பின்னவீனத்துவத் தொடர்ச்சிதான்.

Continue reading →

ஜெயமோகனுக்கு பாரத ரத்னா தருவதில் ஆட்சேபணை இல்லை. மற்றவர்களுக்கு ரத்ன பாலாவாவது தரவேணும்.

Continue reading →

கவித்துவம்தான் பிரச்னை

பெண் கவிஞர் ஒருவரின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியின் ஒலிக்கோப்பைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த சமூக அவல விவகாரங்களில்தான் பெண்கவிஞர்கள் எத்தனை தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்! என்ன பிரச்னை என்றால், கருத்து மேலோங்கி வந்துவிடும்போது கவித்துவம் சற்று சண்டித்தனம் செய்துவிடுகிறது. தமிழகம் போன்ற இடங்களில்கூட திராவிட இயக்கக் கவிஞர்கள்மீது இதனை ஒரு குற்றச்சாட்டாகவே சொல்லுவார்கள். எடடா, எழடா, மானிடா, உன் காது கேட்காதா, தீ வைத்துக் கொளுத்து, பீனிக்சாய் எழு, கடலில் தூக்கிப் போடு என்றெல்லாம் மிக […]

Continue reading →