முழு மகாபாரதம் – மொழியாக்கப் பதிவு

FaceBookல் அரவிந்தன் நீலகண்டன் கொடுத்த ஒரு லிங்க்கைப் பின்பற்றிச் சென்று இந்தப் பக்கத்தை அறிந்தேன். அவசரமாகப் பார்த்ததில் இந்த மனிதர் மிகப்பெரிய ஒரு காரியத்தைச் செய்கிறார் என்பது புரிந்தது. மொழியாக்கமும் லகுவாக உள்ளது. பாரதத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பின் தொடரவேண்டிய வலைப்பதிவு.

http://mahabharatham.arasan.info/

என்ன ஒரு பிரச்னை என்றால் தளத்தில் எந்த லிங்க்கைத் தொட்டாலும் தனித்தனி விண்டோ திறக்கிறது. பயங்கர போர். பாரதப் போரைவிடப் பெரிய போர். இதை மட்டும் நண்பர் சரி செய்தால் சிறப்பு.

சேர்த்துத் தொகுத்துப் படிக்கும் வசதியை மனம் எதிர்பார்க்கிறது. நடைமுறை சாத்தியங்களையும் எண்ணிப் பார்க்கிறேன்.

எப்படியாயினும் இது ஒரு சிறந்த, மிக முக்கியமான, அசாத்தியமான பணி. இது முழுமையுற வாழ்த்துகிறேன்.